நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண முடிகிறது.

கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சசிகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக சசிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“நேற்று மாலை எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நான் வீட்டில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தனிமையில் இருக்கிறேன். கடந்த சில நாட்களாக என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்கள் உடல்நலனைக் கவனத்தில் கொண்டு தேவைப்பட்டால் தங்களைப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு தயாரிப்பாளர் சசிகாந்த் தெரிவித்துள்ளார்.