சென்னை

மிழகத்தில்  இன்றைய (04/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 3,581 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,99,807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,778 பேர் உயிர் இழந்து 8,65,071 பேர் குணம் அடைந்து தற்போது 21,958 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 1,314 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,53,760 பேர் பாதிக்கப்பட்டு 4,268 பேர் உயிர் இழந்து 2,41,246 பேர் குணம் அடைந்து தற்போது 8,246 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 60,153 பேர் பாதிக்கப்பட்டு 694 பேர் உயிர் இழந்து 57,265 பேர் குணம் அடைந்து தற்போது 2,193 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 57,509 பேர் பாதிக்கப்பட்டு 827 பேர் உயிர் இழந்து 54,499 பேர் குணம் அடைந்து தற்போது 2,183 பேர் சிகிச்சையில் உள்ளனர்.