பெங்களூரு: கர்நாடகாவில் 8 மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள் ஏப்ரல்  20ம் தேதி வரை 50% பார்வையாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் கொரோனா தொற்றின் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று கிட்டத்தட்ட 5000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பெங்களூருவில் மட்டும் 3509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து கொரோனா பரவலைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. குறிப்பாக பெங்களூரு நகரம், மைசூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள் ஏப்ரல் 20ம் தேதி வரை 50% பார்வையாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவுக்கு கன்னட திரையுலகைச் சேர்ந்த பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.