திஸ்புர்: அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள 48மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

அசாம் மாநிலத்தில், 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே முதல் மற்றும் 2வது கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 3வது கட்ட தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. மீதமுள்ள 40 தொகுதிகளுக்கு நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.
‘இந்த நிலையில், முன்னாள் பாஜக கூட்டணி கட்சியான, போடோலாண்ட் மக்கள் முன்னணித் தலைவர் ஹக்ரமா மொஹிலாரிக்கு எதிராக அச்சுறுத்தும் கருத்துக்கள வெளியிட்டதாகக் கூறி, அஸ்ஸாம் அமைச்சரும் பாஜக தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு 48 மணி நேரம் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
ஏப்ரல் 02 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஹிமந்தா பிஸ்வா, போடோலாண்ட் மக்கள் முன்னணிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதையடுத்து ஹிமந்தா பிஸ்வாஸ் 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
போடோலாண்ட் மக்கள் முன்னணி, ஏற்கனவே பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]