சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 6ந்தேதி நடைபெற உள்ளதால், சென்னையில் பணியாற்றி வரும் வெளிமாவட்டத்தினர் சொந்த ஊருக்கு சென்று ஜனநாயக கடமையாற்றும் வகையில் தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை 1ந்தேதி முதல் இயங்கி வருகிறது. இந்த பேருந்துகள் மூலம் இதுவரை (கடந்த 3 நாளில்)  சென்னையில் இருந்து 1.74 லட்சம்  பல ஊர்களுக்கு பயணமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூறிய போக்குவரத்துக்கழக அதிகாரி, சட்டமன்றதேர்தலை முன்னிட்டு, சென்னையில் இருந்து 1ந்தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை 5ந்தேதி வரை நீடிக்கும். கடந்த 2 நாள்களில் இயக்கப்பட்ட 4355 பேருந்துகள் வாயிலாக வெள்ளிக்கிழமை இரவு வரை சுமாா் 1.74 லட்சம் போ சென்னையில் இருந்து பயணமாகினா். இதுவரை 32,237 போ முன்பதிவு செய்துள்ளனா்.

அனைத்து பேருந்துகளிலும்   கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றப்படுகினற்ன. கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிா்க்க செயலி ஆகியவற்றின் மூலமாகவோ, பேருந்து நிலையத்தின் முன்பதிவு மையம் மூலமாகவோ முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று கூறினார்.