கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்குள் சென்றது குறித்து முதலமைச்சர் மமதா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் பலகதா பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: நந்திகிராம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குவிந்திருப்பதாக தகவல் வந்தது. அதனை பின்னரே அங்கு விரைந்தேன்.
வெளிமாநிலங்களை சேர்ந்த குண்டர்கள் துப்பாக்கிகளுடன் அங்கு இருந்தனர். அவர்கள் வேறு மொழிகளில் உரையாடினர். அவர்கள் பாஜகவை சேர்ந்த பிற மாநில குண்டர்களாக இருப்பார்கள்.
வாக்குச்சாவடியில் உள்ளூர் மக்களை அனுமதிக்காதது குறித்து ஆளுநரிடம் புகார் கொடுத்து உள்ளேன். விரைந்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.