சிவகங்கை: தபால் வாக்குகள் செலுத்துவதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அவசரப்பட வேண்டாம் என்று ஜாக்டோஜியோ அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

சிவகங்கையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் தபால் வாக்குகள் செலுத்துவதில் அவசரம் காட்டினால், தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆசிரியர்கள் சங்கம் அச்சம் தெரிவித்தது.

தபால் மூலம் வாக்களிக்க, வாக்கு எண்ணிக்கை தினமான மே 2 காலை 8 மணி வரை கால அவகாசம் உள்ளது என்று ஆசிரியர் சங்கம் தெரிவித்தது.  எனவே தபால் வாக்கு செலுத்தும் வழிமுறைகளை பின்பற்றாமல், அவசரமாக வாக்களிப்பதால் செல்லாமல் போக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில், சட்டசபை தோ்தலில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு தபால் வாக்குகளைச் செலுத்துவதில் பெரும் சிக்கல் இருப்பதாகவும், அப்பிரச்னைக்கு தோ்தல் ஆணையம் தீா்வு காண வேண்டும் என்றும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இது தொடா்பாக சென்னையில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா்கள் நேரில் சந்தித்து மனு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.