சென்னை:
கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் தேர்தல் பணியில் இருந்து விடுவித்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் மு.வடநேரே, எஸ்.பியாக ஷஷாங்க் சாய் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, கோவை காவல் துணை ஆணையாராக ஜெயச்சந்திரனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பணிகள் தொடர்பார்பாக புகார்கள் வந்ததையடுத்து அதிகாரிகளை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel