டெல்லி: அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி ஏப்ரல் 14ந்தேதி நாடு முழுவதும் மத்தியஅரசு அலுவலகங்களுக்கு பொதுவிடுமுறைவிடப்படுவதாக மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ந்தேதி சட்டமேதை அம்பேத்கர் பிறந்த தினமாகும். தமிழ்ப்புத்தாண்டையொட்டி தமிழகத்தில், அரசு விடுமுறை நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்தநாளையும் மத்தியஅரசு இந்த ஆண்டு முதல் பொதுவிடுமுறையாக அறிவித்து உள்ளது.
அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்தியஅரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை என அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel