சென்னை:
பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருளை உற்பத்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது. முதலில்ஆவின்பால் பாக்கெட்டில் இருந்து தொடங்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பிளாஸ்டிக் தடை தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில்விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, ஆவின் பால் பாக்கெட்டுகளையும், பிளாஸ்டிக்கிற்கு பதில் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யலாமே என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், கண்ணாடி பாட்டில்கள் உபயோகப்படுத்துவது கடினமானது… அது உடைய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், டாஸ்மாக்கில் பீர் பாட்டில்களைக் கையாள முடிகிறது, ஆனால், ஆவின் பால் பாட்டில்களைக் கையாள முடியவில்லையா? என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, வாதாடிய அரசு வழக்கறிஞர், உணவுப்பொருட்களை அடைக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கும் தடை விதிக்க பரிந்துரை செய்யப்படும் என கூறினார்.
பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள் பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருளை உற்பத்தி செய்ய அறிவுறுத்தினர்.
இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.