Shahrukh Khan

டெல்லி:

டெல்லி கலவரத்தின்போது  துப்பாக்கிச்சூடு நடத்தியவரும், காவல்துறையினரையே துப்பாக்கியை காட்டி மிரட்டியவருன  ஷாருக்கான் (வயது 27) கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 24ந்தேதி அன்று வடக்கு டெல்லியில்  குடியுரிமைச் சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே மூண்ட மோதலின்போது,  துப்பாக்கியுடன் தோன்றிய நபர் எட்டு முறை வானத்தை நோக்கி சுடும் வீடியோ வைரலானது.

மேலும், துப்பாக்கியால் சுட்ட நபரின் பெயர் ஷாருக் எனவும், அவர் காவல்துறையினரையும் துப்பாக்கியால் மிரட்டியது தெரியவந்தது. அது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது.

அவரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், அவர் அவ்வப்போது இருப்பிடங்களை மாற்றி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஷாருக்கான் உ.பி.யில் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.