கோவை :

 

“பிரியாணில மருந்து கலக்கறானுங்க உஷாரா இருந்துக்கோங்க” இப்படி ஒரு தகவல் வாட்ஸாப் க்கு வர  ?

இந்த தகவலை பற்றி சிலர்  கோவை போலீசுக்கு தகவல் தர, விசாரணை நடத்திய போலீசார் பீதியை கிளப்பிய ஆசாமியை கவனிக்க காத்திருக்காங்க. விசாரணையில் தெரிஞ்சிகிட்ட விஷயம் இது தான்….

@RD_BANA அப்படிங்கற ட்விட்டர் பக்கத்துல, ஒரு பிரியாணி அண்டா, கடைக்கார  பாய் அண்டால இருந்து  பிரியாணி  எடுக்கறமாதிரி, அப்புறம் ஒரு அட்டைப்பெட்டி நிறைய மாத்திரைகள், ஒரு மாத்திரை அட்டை, இப்படி நாலு போட்டோ

இதுல என்ன இருக்குனு நினைக்கறவங்களுக்கு இந்த நாலு படத்தைப் போட்டுட்டு, வெறுப்புணர்வை தூண்டும் விதமா நாலுவரி எழுதியிருந்தார்,  ” கோவைல இருக்க  இந்த கடைல முஸ்லீம் வந்து சாப்பிட்டா அவங்களுக்கு ஒரு அண்டாவுல இருந்தும், இந்துக்கள் வந்து சாப்பிட்டா அவங்களுக்கு வேற ஒரு அண்டாவுல இருந்தும், பிரியாணி கொடுக்கறாங்க, இந்துக்களுக்கு கொடுக்கற பிரியாணில மாத்திரை கலக்கறாங்க, இதை சாப்பிடறவங்களுக்கு ஆண்மை குறைவாயிடும்” இதுதாங்க அந்த படங்களுக்கு மேல இவர் செதுக்கிவெச்ச வாசகம்.

இந்த தகவல் சமூக வலைத்தளம் பூரா பரபரக்க, கோவை போலீசார் இது என்ன வில்லங்கம்னு விசாரிக்க, அப்புறம் தான் தெரிஞ்சுது இது புரளின்னு,

புரளீனா சும்மா இல்லைங்க, இவரு அனுப்பின தகவலில் இருந்த படங்களை வெச்சு ஆய்வு நடத்தின போலீசார், அந்த மருந்து அட்டை இருந்த பெட்டியும் மாத்திரையும் கடந்த 2019 ல் இலங்கையில் இருந்து வந்த நபர்களிடம் பறிமுதல் செய்த  தடைசெய்யப்பட்ட மருந்து, இது அப்பொழுது செய்திகளில் வந்த படம்.

அப்போ அந்த பிரியாணி அண்டா,  அது 2016 ல ஸ்ட்ரீட் புட் அபிசியல் ங்கற  யூட்யூப்  சேனல்ல வெளிவந்து இதுவரை 40 லட்சம் பேர் பார்த்த  ஒரு விடியோவுக்கு வைக்க பட்ட புகைப்படம்.

இது குறித்து தெரிந்துகொண்ட போலீசார் “இதுபோன்ற ஆதாரமில்லாத தகவலை பகிராதீர்கள்,  சமுதாய  பொறுப்புள்ள நபராக நடந்துகொள்ளுங்கள்” என்று அவரது தகவலுக்கு பதிலளிக்க, அந்த தகவலை தனது பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார் அந்த ஆசாமி.

“விரைவில் இது தொடர்புடைய நபரை பிடித்து விசாரிப்போம், சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு  தகவல் வந்தாலும், அதோட உண்மைத்தன்மை தெரிஞ்சிக்காம யாரும் இன்னொருத்தருக்கு அனுப்பவேண்டாம்” என்று  கோவை நகர போலீஸ் கமிஷனர் திரு. சுமித் சரண் வேண்டுகோள் விடுத்தார். 

 

நன்றி : தி நியூஸ் மினிட்