டெல்லி: வரும் ஞாயிறுடன் சமூகவலைதளங்களில் இருந்து வெளியேற போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
சமூகவலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றை அதிகளவு பயன்படுத்துபவர் பிரதமர் மோடி. இந்த வலைதளங்களில் தமது கருத்துகள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிடுவார்.
பொதுவெளியில் தமது பிரதான ஊடகமாக இவற்றை அவர் அதிகம் பயன்படுத்தி அனைவரிடமும் உரையாடி வருகிறார். அவரது டுவிட்டர் பதிவுகள் அதிக பிரபலம்.
இந் நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமையுடன், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் எனது சமூக ஊடக கணக்குகளை விட்டுவிட நினைத்திருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
இதையும் தமது டுவிட்டரில் தான் தெரிவித்துள்ளார். எனவே அதுவரை நீங்கள் அனைவரும் தொடர்ந்து தமது கருத்தகளை பதிவிடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது கருத்தை கண்டு பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். வேறு ஏதேனும் புதிய தொழில்நுட்பத்தை பின்பற்ற போகிறீர்களா என்றும் கேள்விகள் கேட்டுள்ளனர்.