
மும்பை: இந்தியாவின் இளம் நட்சத்திரம் ரிஷப் பன்ட், சூழலுக்கு ஏற்றபடி அணிக்கு பங்களிக்கிறார் என்றும், அனைத்துப் பந்துகளையுமே சாத்த நினைப்பதில்லை என்றும் பாராட்டியுள்ளார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
அவர் கூறியுள்ளதாவது, “ரிஷப் பன்ட்டின் ஆட்டம் மிகவும் கவர்கிறது. கடந்த சில மாதங்களாக அவர் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார். பெரும்பாலான நேரங்களில் அவர் புத்திசாலித்தனமாக கிரிக்கெட்டையே வெளிப்படுத்துகிறார்.
அவர், ஒவ்வொரு பந்தையுமே சாத்த வேண்டுமென நினைப்பதில்லை. சரியான பந்துக்கு காத்திருக்கிறார். தனக்கான பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்கிறார். மற்றபடி, பந்துக்கு ஏற்றபடி ஆடுகிறார். அவர் நல்ல எஃபெக்ட் கிடைப்பதற்கு அடிக்கையை பயன்படுத்துகிறார்.
பீல்டர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்துக்கொள்வதால், அவர் காலியிடங்களிலேயே அடிக்கிறார்” என்றுள்ளார் கவாஸ்கர். ரிஷப் பன்ட்டை, சமீப காலங்களில் பலரும் பெரியளவில் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]