அருள்மிகு ஶ்ரீ பாலாம்பிகை சமேத ஶ்ரீ (செளந்தரேஸ்வரர்) கார்கோடேஸ்வரர் திருக்கோயில்,
திரு நல்லூர், கார்கோடீஸ்வரம், ரதிவரபுரம் காமரசவல்லி (கிராமம்), திருமானூர் வட்டம்,
அரியலூர் மாவட்டம்.
சுமார் 2000-வருடங்கள் பழமையான இந்த ஈசனாலயத்தில், கிழக்கு பார்த்த திருக்கோலத்தில் இறைவனும், தெற்கு பார்த்த திருக்கோலத்தில் இறைவியும் அழகு அருட்காட்சியளிக்கிறார்கள்.
- நாகங்களின் அரசனானகார்க்கோடகன்,ஶ்ரீ மகாவிஷ்ணுவின் அறிவுரைப்படி, இத்தல இறைவனான ஶ்ரீ செளந்தரேஸ்வரரை வழிபட்டு (கார்க்கோடகனும் மற்றும் அவர் வம்சமும்) உயிர்பிழைத்த தலம்.
- இத்தல இறைவன் செளந்தரேஸ்வரரை கார்க்கோடகன் வழிபட்டதால், ஈசனின் திருப்பெயர் கார்கோடேஸ்வரர் என்றழைக்கப்படுகிறது
- நாக அரசனுக்கு அருட்காட்சியளித்து கார்க்கோடகனையும் அவர் வம்சத்தையும் உயிர்ப்பித்த நாளும், நேரமும் கடக ராசி, கடக லக்னம் என்பதால், இந்த ராசிக்காரர்கள் இத்தல இறைவனை வழிபடக் கஷ்டங்கள், நாகதோஷம், கால சர்பதோஷம் போன்றவை விலகும் என்பது ஐதீகம்.
- தன் கணவனை (மன்மதனை)உயிர்பித்துத்தர, அவனது துணைவிரதிதேவி ஈசனை வழிபட்ட தலம்.
- ரதிதேவியின் வேண்டுதலால் நம் ஈசன், அவளின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரியுமாறு மாங்கல்ய பாக்கியம் அளித்தாராம். ரதிதேவி வழிபட்டதால், அக்காலத்தில் இச்சிவ தலத்தின் ஊர் ரதிதேவி புரம் என்றும் அழைக்கப்பட்டதாம்.
- சிவனாலயத்திற்குரிய முக்கியமான விழாக்கள் அத்தனையும் சிறப்புற நடைபெறும் இத்தலத்தில், சுமார் 45-புராதன கல்வெட்டுகளும், சிற்பங்களும் இந்த சிவாலய பெருமைகளைப் பல பல காலங்களைக் கடந்து இன்றும் பறைசாற்றுகிறது.
- தடைபெறும் திருமண நிகழ்வுகள் தடைநீங்கப்பெற்று நல்வாழ்கைத்துணை அமையவும், கணவன் மனைவி கருத்தொற்றுமை மேலோங்கவும் இத்தல இறை தம்பதியினரை வழிபடுகிறார்கள்.