ஆண்டிகுவா: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்துவரும் விண்டீஸ் அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களை சேர்த்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில், இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று துவங்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி, வீண்டீஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய விண்டீஸ் அணியில் துவக்க வீரர் பிராத்வெய்ட் 30 ரன்களை அடித்து ஆடிவருகிறார். ஜான் கேம்ப்பெல் 5 ரன்களில் ஆட்டமிழக்க, நிக்ருமா டக்அவுட் ஆனார்.
கைல் மேயர்ஸ் 49 ரன்களில் அவுட்டாகி, 1 ரன்னில் அரைசத வாய்ப்பை நழுவவிட்டார். தற்போது, பிராத்வெய்ட் உடன் பிளாக்வுட் 16 ரன்களை எடுத்து ஆடிவருகிறார்.