பொள்ளாச்சி: திமுக அதிமுகவினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, பொள்ளாச்சி ஜெயராமன் மகன் உள்பட 8 பேர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பில் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில், வரதராஜன் போட்டியிடுகிறார். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் வி.லோகேஸ்வரி என்பவரும், அமமுக சார்பில் சுகுமாரும், மக்கள்நீதி மய்யம் கட்சி சார்பில் சதீஷ்குமார் என்பவரும் போட்டியிடுகின்றனர். அங்கு திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில்,பொள்ளாச்சி அருகே ஒக்கிலிப்பாளையத்தில் திமுக பரப்புரையின் போது தகராறு ஏற்படுத்தியதாக , திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பொள்ளாச்சி ஜெயராமன், மகன் பிரவீன் உள்ளிட்ட 8 பேர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Patrikai.com official YouTube Channel