டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,20,39,210 ஆக உயர்ந்து 1,61,881 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,206 பேர் அதிகரித்து மொத்தம் 1,20,39,210 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 295 அதிகரித்து மொத்தம் 1,61,881 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 32,149 பேர் குணமாகி இதுவரை 1,13,53,727 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 5,18,767 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 40,414 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,13,875 ஆகி உள்ளது நேற்று 108 பேர் உயிர் இழந்து மொத்தம் 54,181 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 17,874 பேர் குணமடைந்து மொத்தம் 23,32,453 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,25,875 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 2,216 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,17,994 ஆகி உள்ளது. இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,580 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,853 பேர் குணமடைந்து மொத்தம் 10,88,522 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,578 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 3,082 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,87,012 ஆகி உள்ளது இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,504 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,285 பேர் குணமடைந்து மொத்தம் 9,51,452 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,037 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 1,005 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,98,815 ஆகி உள்ளது. நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,205 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 324 பேர் குணமடைந்து மொத்தம் 8,86,216 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,394 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 2,194 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,79,473 ஆகி உள்ளது இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,670 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,270 பேர் குணமடைந்து மொத்தம் 8,53,733 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,070 பேர் சிகிச்சையில் உள்ளனர்.