புனே: ஒருநாள் கிரிக்கெட்டில், பார்ட்னர்ஷிப்பில் 5000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய ஜோடி என்ற பெருமையைப் பெற்றது ரோகித் ஷர்மா – ஷிகர் தவான் ஜோடி.
இதற்குமுன், ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களைக் கடந்த இந்திய ஜோடி என்ற பெருமையை, சச்சின் – கங்குலி ஜோடி மட்டுமே பெற்றிருந்தது. தற்போது அந்த சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது.
இன்றையப் போட்டியில், துவக்க ஜோடிகளான ரோகித் – தவான் இருவரும், 14 ஓவர்களிலேயே 100 ரன்களை அடித்தனர். இன்றையப் போட்டியில், ரோகித் 37 ரன்களில் அவுட்டாக, தவான் அரைசதம் அடித்தார்.