புனே: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியை வென்றதன் மூலம், ஒருநாள் தொடரை வென்றது இந்தியா.

போட்டியின் கடைசிப் பந்துவரை பதற்றமும் பரபரப்பும் நிலவிய இந்த ஆட்டத்தில், இந்தியா அதிகம் பதற்றமடைந்தது. அந்த பதற்றம் தென்னாப்பிரிக்க அணியை நினைவுபடுத்துவதாக இருந்தது.

பல கேட்சுகள் கோட்டைவிடப்பட்டு தப்பிப் பிழைத்த சாம் கர்ரன், கடைசிவரை நாட்அவுட்டாக களத்தில் இருந்து மிரட்டினார். இருப்பினும் ஒருவழியாக இந்தியா, 7 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

83 பந்துகளில் 95 ரன்களை அடித்தார் சாம் கர்ரன். அவற்றில், 3 சிக்ஸர்கள் & 9 பவுண்டரிகள் அடக்கம். கடைசி ஓவரில் நடராஜன் யார்க்கர்களாக வீசி, அணியை எப்படியோ காப்பாற்றிவிட்டார்.

இந்தியா சார்பில் ஷர்துல் தாகுர் 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.