ஜெனீவா: இந்தியர்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா ஊசிகளை விட பல மடங்கு தடுப்பூசி மருந்து உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
ஐ.நா. அமைதி குழுவுக்கு இந்தியாவின் பரிசாக 2 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்படும் என்று கடந்த பிப்ரவரியிலேயே அறிவித்திருந்தது. அதன்படி இந்த மருந்துகள் இன்று முதல் அனுப்பப்படுகின்றன.
இந் நிலையில், இந்தியர்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா ஊசிகளை விட பல மடங்கு தடுப்பூசி மருந்து உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐநா சபையில் இநதியாவின் நிரந்தர துணை பிரதிநிதி நாகராஜ் நாயுடு இதை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறி இருப்பதாவது: கொரோனா தடுப்பூசியை எவ்வித ஏற்றத்தாழ்வும் இன்றி உலக நாடுகளின் மக்கள் அனைவரும் பெறவேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இதனால் ஐநா சபையில் உறுப்பினர்களாக உள்ள 180க்கும் அதிகமான நாடுகள் பயன்பெறும் என்று கூறினார்.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட தருணத்திலும் ஏழை நாடுகளுக்கு அவை கிடைக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறிய நிலையில் இந்தியா தமது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.