நெல்லை: கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருகிறது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் காரணமாக அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், கோடை வெயிலும், தன் பங்குக்கு சுட்டெரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் மட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டத்திலும் சில பகுதிகளில் மழை பெய்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.