சென்னை: கட்சிப் பொறுப்பில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி திடீரென விலகியுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் ரத்தினசபாபதி. சட்டசபை தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. அதனால் அவர் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந் நிலையில் கட்சிப் பொறுப்பில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி திடீர் என விலகியுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அவைத்தலைவர் பதவியில் இருந்து வந்த அவர் தற்போது தனது பதவியினை ராஜினாமா செய்துள்ளார்.