தேசிய திரைப்பட விருது இந்திய அரசால் 1967ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள நிலையில், சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ் தட்டி சென்றார் .

முதன் முதலில் தேசிய விருதை பெற்ற நடிகர் என்ற பெருமைக்குரியவர் எம்.ஜி.ராமச்சந்திரன். 1971ம் ஆண்டு எம்.கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த ரிக்ஷாக்காரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழக்கப்பட்டது.

1982ம் ஆண்டு பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த மூன்றாம் பிறை திரைப்படத்திற்கு வழக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

1987ம் ஆண்டு மீண்டும் சிறந்த நடிகருக்கான விருதை நாயகன் படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசன் தட்டிச் சென்றார்.

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான இந்தியன். படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

2003ல் வெளியான படம் பிதாமகன். இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது.

காஞ்சிவரம். படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ் 2007ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

2010ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் படத்தில் சிறந்த நடிப்பை கொடுத்ததற்க சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷ் பெற்றார்.

அதே போல தற்போது அறிவித்துள்ள 2019 ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பிலும், வெற்றி மாறன் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்.