அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தமைக்கு சென்னையில் பாராட்டுவிழா நடைபெற்றது.

விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் பேசும் போது, அசுரன் திரைப்படம் எடுத்த போது தனக்கு மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டி இருந்ததாகக் குறிப்பிட்டார்.

அந்த நேரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபோது படத்தை வெளியிடுவதற்கான தேதி மிகக் குறுகிய காலமாக இருந்தது. தன்னால் முழுமனதோடு நிறைவாக வேலை செய்ய முடியவில்லை. ஆதலால் அசுரன் தானாகவே உருவான படம் என்று குறிப்பிட்டார். சமூகத்தில் இன்றைக்கு இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும் தனக்கு முழு மனநிறைவை தராத படமாக அமைந்துள்ளது என்றார்.

தயாரிப்பாளர் தாணு, நடிகர் தனுஷ் ,மஞ்சுவாரியார்,கென் கருணாஸ் போன்ற அனைவரது பங்களிப்பும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்திருப்பதாக கூறினார். அசுரன் படத்தின் நூறாவது நாள் இன்று அதே நேரத்தில் தேசிய விருதிற்கு பாராட்டு விழா என ஒரே மேடையில் இரு நிகழ்வுகள் நடப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும் வெற்றிமாறன் தெரிவித்தார்.

தனுஷ் அமெரிக்காவில் இருப்பதால் அவரால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. எனவே மேடையில் இருந்தவர்களிடம் வீடியோகால் மூலம் பேசி மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதற்காக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.