டலூர்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வரிகளை அதிகரிக்க உள்ளதாக தமிழக அமைச்சர் எம் சி சம்பத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  அதிமுக சார்பில் ஏராளமான தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளதால் அது நிறைவேற்றப்படுமா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.  அவர் இன்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த  பேட்டியில், “எங்கள் கூட்டணி வலிமையாக உள்ளது. எங்களுக்கு அரசின் திட்டங்கள் கூடுதல் பலத்தை அளித்துள்ளன. எங்களது தேர்தல் அறிக்கைதான் அருமை.

அதில் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள், மாதந்தோறும் ரூ.1,500, சூரியசக்தி அடுப்பு, வாஷிங் மெஷின் எனப் பெண்கள் அனைவருக்கும் உகந்த திட்டங்களை முன்மொழிந்துள்ளோம்.   ஆனால் எங்களால் இவற்றை வழங்கமுடியாது என்று எதிர்க் கட்சிகள் வழக்கம் போல் எங்களைக் குற்றம் சாட்டுகின்றன.

மேலே குறிப்பிட்டுள்ள நலத்திட்டங்களை வழங்க, வரி வருவாயைக் கூட்டுவோம்.  அதாவது வணிகத் துறை, தொழில், போக்குவரத்து, டாஸ்மாக் ஆகிய துறைகளில் வரியை அதிகரித்து, திட்டங்களை நிறைவேற்றுவோம்.   இது குறித்து பல்வேறு துறை வல்லுநர்களைக் கலந்தாலோசித்து, விவாதித்து, நிதித் துறைச் செயலாளரைச் சந்தித்துப் பேசித்தான் இந்தத் திட்டங்களையே அறிவித்துள்ளோம்.

அப்படி இருக்க இவற்றை எப்படிக் கொடுக்காமல் இருப்போம்?  காழ்ப்புணர்வு காரணமாக எதிர்க் கட்சியினர்  அப்படிப் பேசுகின்றனர்.  ஆனால் எங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாங்கள் கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களைப் பிடிப்போம். வடக்கு அத்துடன் மண்டலத்திலும் வலுவாக உள்ளோம். தெற்கு மண்டலத்தில் இருந்து நிறைவான கருத்துகளைப் பெற முடிகிறது. எனவே 200க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் ஒரு அமைச்சர் வரிகளை உயர்த்துவதாக அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.   இந்த பேச்சு அதிமுகவின் வெற்றியைப் பெரிதும் பாதிக்கக் கூடும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.