டெல்லி: இந்தியாவில் இதுவரை 40.20 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தடுப்பூசி போடுவதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் நேற்று 40,906 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில், 25,681 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 110 நாட்களில் இதுவே அதிக பாதிப்பு என கூறப்படுகிறது. இந்தியாவில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எணிக்கை 1,15,54,895 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர ஜனவரி 16ந்தேதி முதல் தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடுவதில் தமிழகம் உள்பட பல மாநில மக்கள் ஆர்வம் காட்டாத நிலையே தொடர்கிறது.
இந்த நிலையில், நாடு முழுவதும் இதுவரை 40.47 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி,
இந்தியாவில் நேற்று (19ந்தேதி() ஒரே நாளில் 27.23 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் 3.48 கோடி பேருக்கும், 2வது டோஸ் 72.21 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 40.60 லட்சம்,
ராஜஸ்தானில் 40.20 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 19.64 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம், தடுப்பூசி செலுத்துவதிலும் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று பரவல் குறித்து மத்தியஅரசு வெளியிட்டள்ள சுற்றறிக்கையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், கொரோனா வைரசுக்கான மருத்துவப் பரிசோதனைகளை துரிதப்படுத்த வேண்டும். வைரசால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை, 72 மணி நேரத்தில் கண்டறிந்து, அவர்களுக்கும் பரிசோதனைகளை செய்து தனிமைப்படுத்த வேண்டும். அதிக பாதிப்புகள் ஏற்படும் மாவட்டங்களை, தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மேலும் அங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்.
பொது இடங்களில் அதிக மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். இதுவரை, நாடு முழுவதும், ஏறக்குறைய, நான்கு கோடி பேருக்கு மட்டுமே, கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன. எனவே, தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.