
தல அஜித்தை பொது இடங்களில் பார்ப்பது எளிது இல்லை. அதனால் அவரின் புகைப்படங்கள் ஏதாவது வெளியானால் ரசிகர்கள் துள்ளிக் குதிப்பார்கள்.
ஒரு சில தினங்களுக்கு முன் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியது. ரசிகர்கள் முந்தியடித்துக் கொண்டு அஜித்துடன் சேர்ந்து செல்ஃபி எடுத்திருக்கிறார்கள். அந்த புகைப்படங்களில் ஷார்ட்ஸ், டி சர்ட், தொப்பியில் இருக்கிறார் அஜித்.
அஜித் சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் கமிஷ்னர் அலுவலகத்தில் உள்ள ரைஃபிள் கிளப்பில் பயிற்சி எடுக்க வந்த புகைப்படங்கள், மற்றும் அஜித் துப்பாக்கியோடு நின்றபடி போஸ் கொடுத்த புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்ட நிலையில், அஜித் சைக்கிளிங் செய்யும் புகைப்படங்கள் வெளியானது.
இந்நிலையில் அவரின் அன்சீன் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னணி நடிகராக இருந்தாலும் மிகவும் எளிமையான மனிதராகக் கருதப்படும் அஜித், ஆட்டோவில் பயணிக்கும் வீடியோ தான் அது. அந்த ஆட்டோவை பின்தொடர்ந்த ஒரு ரசிகர் இந்த வீடியோவை எடுத்ததாக தெரிகிறது.
[youtube-feed feed=1]Unseen video of our dear #Thala #Ajith 🙏 #Ajithkumar #Valimai pic.twitter.com/qwbCK00Lxh
— TRENDS AJITH (@TrendsAjith) March 18, 2021