சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உளள்ள 2021-சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு  எம்.ஜி.ஆர். கழகம் ஆதரவு தெரிவிப்பதாக, அக்கட்சியின்  தலைவர் ஆர்.எம்.வீரப்பன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு  ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது.. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கட்சி சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர்.

தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. திமுகவுடன், காங்கிரஸ் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி,  மனிதநேய மக்கள் கட்சி,  தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், ஆதித்தமிழர் பேரவை , மக்கள் விடுதலைக் கட்சி என 13 கட்சிகள் கொண்ட மெகா  கூட்டணி அமைந்துள்ளது. அத்துடன் பல்வேறு சமுதாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான எம்.ஜி.ஆர்.கழகமும் திமுகவுக்கு ஆதரவு தருவாக அறிவித்து உள்ளது.