பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் சுல்தான் ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தி கடந்த 2011-ம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து கடந்த அக்டோபர் மாதம் கார்த்தி – ரஞ்சனி தம்பதினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தற்போது குழந்தைக்கு ‘கந்தன்’ என்று முருக கடவுளின் பெயரை சூட்டி இருக்கிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் ‘கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக கந்தன் என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன்… அப்பா…என்று பதிவு செய்திருக்கிறார்.

[youtube-feed feed=1]