அபுதாபி: ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி-20 போட்டியில், ஆப்கன் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஆப்கன் அணியின் துவக்க வீரர் குர்பாஸ் 45 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 87 ரன்களை விளாசினார். அஷ்கர் ஆப்கன் 55 ரன்களை அடிக்க, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 198 ரன்களை சேர்த்தது.

பின்னர், கடின இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணியில், தினாஷே மட்டுமே அதிகபட்சமாக 44 ரன்களை அடித்தார். மற்ற யாரும் எதிர்பார்த்த ஆட்டத்தை ஆடவில்லை.

இறுதியில், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே 150 ரன்களை மட்டுமே எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன்மூலம், மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது ஆப்கன் அணி.