உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உயிரிழந்தார். அவருக்கு வயது 61. அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2003-ம் ஆண்டு வெளியான படம் ’இயற்கை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அதற்காக தேசிய விருதும் பெற்றவர். அதைத் தொடர்ந்து ’ஈ’, ’பேராண்மை’, ’புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என பல்வேறு சமூக பிரச்னைகளை மையப்படுத்திய படங்களை இயக்கினார்.
இதையடுத்து மார்ச் 15-ம் தேதி திங்களன்று சென்னை மயிலாப்பூரில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. பின்பு மயிலாப்பூர் மின் மயானத்தில் ஜனநாதனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் சோகம் தாங்காமல் மாரடைப்பு காரணமாக அவரது தங்கை லக்ஷ்மி இன்று உயிரிழந்தார். அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் அவரது குடும்பத்தினர் மத்தியிலும் திரைத்துறையிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.