சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்காக காரணமாக, கொரோனா தொற்று பரவலை குறிப்பிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான 7 பேரில்  ரவிச்சந்திரனும் ஒருவர். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  இவர்கள் 7 பேரையும் விடுவிக்க கோரி பலமுறை முறையிட்டும், மத்தியஅரசு விடுதலை செய்ய மறுத்து வருகிறது.

இந்த நிலையில், கைதி  ரவிச்சந்திரனுக்கு 2மாதம் பரோல் வழங்கக்கோரி உயர்நீமன்ற மதுரை கிளையில் அவரது தாயார் ராஜேஸ்வரி  மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தமிழகஅரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,   கொரோனா பரவி வரும் சூழலி ரவிச்சந்திரனுக்கு சாதாரண பரோல் வழங்க முடியாது . அது தவிர, தேர்தல் நேரம் என்பதால் இச்சூழலில் ரவிச்சந்திரனுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் அரசுத ரப்பு தெரிவித்துள்ளது.

அரசின் பதிலைத்தொடர்ந்து,  ரவிச்சந்திரனின் பரோல் வழக்கின் விசாரணையை நாளை மறுநாளைக்கு  நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ரவிச்சந்திரன் சொநத ஊர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை  அருகே உள்ள மீனாம்பிகை நகர். கடந்த 2020ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயார் ராஜேஸ்வரியை பார்ப்பதற்காக பரோலுக்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால், சிறை நிர்வாகம் மறுத்த நிலையில், நீதிமன்றம் அவருக்கு 16 நாள் பரோல் வழங்கியது. அதைத்தொடர்ந்து அவர் 16 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]