உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கு அவளது தந்தை திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார்.
மாப்பிள்ளையின் வயது- நாற்பது.
“நான் படிக்க விரும்புகிறேன். எனக்கு கல்யாணம் வேண்டாம்” என அப்பாவிடம் மன்றாடினாள். அவர் கேட்கவில்லை.
மகளை அடித்து உதைத்து திருமணத்துக்கு கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் அந்த மாணவி வீடியோவில் தனது நிலையை பதிவு செய்து, கதறி அழுது, போலீசாருக்கு அதனை அனுப்பி வைத்தாள்.
“எனது திருமணத்தை தடுத்து நிறுத்தாவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார், அந்த மாணவியின் தந்தை மீது வழ்க்கு பதிவு செய்தனர்.
– பா. பாரதி