டெல்லி: இமாச்சலப் பிரதேச மாநில பாரதியஜனதா கட்சி எம்.பி.வீட்டில் மரணம் அடைந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டம் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இமாச்சலபிரதேச மாநிலம் மண்டி பாராளுமன்ற  தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்  ராம்ஸ்வரூப் சர்மா. இவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி, இன்று காலை டெல்லியில் நடைபெற இருந்த பாஜக நாடாளுமன்றக் கட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என பாஜக தலைமை அறிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேச எம்.பி., மண்டியைச் சேர்ந்த ராம் ஸ்வரூப் சர்மா  பாஜக எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மா  டெல்லியின் வடக்கு அவென்யூவில் உள்ள அவரது வீட்டிற்குள் இறந்து கிடந்தார்.
சர்மா தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.  அவரது மர்ம மரணம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், ஷர்மாவின் மரணம் குறித்து அறிந்த பின்னர், இன்று காலை திட்டமிடப்பட்ட பாராளுமன்றக் கட்சி கூட்டத்தை பாரதிய ஜனதா ரத்து செய்தது.