மான்செஸ்டர்: உலகக்கோப்பை கால்பந்து மற்றும் யூரோ கோப்பை கால்பந்து தொடர்களை, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டுமென்றுள்ளார் ஃபிஃபா அமைப்பின் உலகளாவிய கால்பந்து மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஆர்சின் வெங்கர் தெரிவித்துள்ளார்.

அவர், ஃபிஃபா அமைப்பின் தலைவர் கியானி இன்ஃபான்டினோவுக்கு நெருங்கிய ஆலோசகராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் கூறியுள்ளதாவது, “உலகக்கோப்பை மற்றும் யூரோ கோப்பை கால்பந்து தொடர்களில் ஆடும் வீரர்களின் சராசரி வயது 27 அல்லது 28 என்பதாக உள்ளது. இந்நிலையில், ஒரு தொடரிலிருந்து, அடுத்த தொடருக்கு காத்திருக்கும் காலம் 4 ஆண்டுகள் என்று இருக்கையில், சராசரி வயது 32 அல்லது 33 என்பதாக ஆகிவிடுகிறது.

இதனால், வீரர்களின் உடல்திறன் மற்றும் ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டு, அவர்கள் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இந்த இடைவெளியை 2 ஆண்டுகள் என்று குறைக்கும்போது, வீரர்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்” என்றுள்ளார் அவர்.