டெல்லி: 24 வாரங்கள் வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கருவுற்ற பெண்கள் தவிர்க்க இயலாத சூழ்நிலைகளின் காரணமாக தங்களது கருவை கலைக்க விரும்பினால், 20 வாரங்கள் வரையிலான கருவை கலைக்க  வழி செய்யும் சட்டங்கள் நாட்டில் நடைமுறையில் உள்ளது.

ஆனால் இந்த கால அளவை 24 வாரங்களாக உயர்த்துமாறு மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு  அமைப்புகளிடம் இருந்து அரசிற்கு கோரிக்கைகள் விடுத்திருந்தன.

இந்நிலையில் 24 வாரங்கள் வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் இன்று தாக்கல் செய்ப்பட்ட இந்த மசோதா நிறைவேறியுள்ளது.

பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சிறுமிகள் மற்றும் வல்லுறவின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பலனளிப்பதாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.