சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது, எப்போதும் போல அதிமுக அமைச்சர் திண்டுக்கல்சீனிவாசன் உளறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் திண்டுக்கல் சீனிவாசன். இவர் அவ்வப்போது, ஏதாவது உளறுவது வாடிக்கையாகி வருகிறது.

அதுபோல, தற்போது மீண்டும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும்அமைச்சர் சீனிவாசன் தேர்தல் பிரசாரத்தின்போது, சிலிண்டருக்கு அதிமுக அரசு மானியம் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், ஒரு சிலிண்டர் விலை ரூ.4500 ரூ.5000 என பேசினார். மேலும்,

“வீட்டிலுள்ள தாய்மார்கள், வீட்டுக்காரர் வெளியூர் போயிருக்காருன்னு கவலையேபடாதீர்கள். அரசு 1,500 ரூபாயை ஒன்றாம் தேதியானால் உங்கள் குடும்பத் தலைவியின் கணக்கிற்கு வந்துவிடும். இதேபோல் கல்விக்கு வாங்கிய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்” என பேசினார்.

சிலிண்டர் விலை தற்போது ரூ.835 ஆக விற்பனை செய்யப்பட்டு வரும நிலையில், அமைச்சரோ ரூ.5ஆயிரம் என உளறியது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.