சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, அனைவரும் வாக்குப்பதிவு செய்யும் வகையில், அனைத்து தொழில் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டுமென தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்குமான சட்டமன்ற தேர்தல், மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான ஒரு இடைத்தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில், ஏப்ரல் 6-ம் தேதி தினக்கூலிகள், தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள், கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களள் என அனைத்து நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டுமென தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.