புதுடெல்லி: விஜய் ஹசாரே டிராபி இறுதிப் போட்டியில், உத்திரப் பிரதேச அணியை வீழ்த்திய மும்பை அணி, சாம்பியன் கோப்பையை வென்றது.
இந்த இறுதிப்போட்டி, டெல்லியின் அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதனாத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற உத்திரப்பிரதேசம், முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அந்த அணியின் மாதவ் கவுசிக் 158 ரன்களும், சமர்த் சிங் 55 ரன்களும், அக்ஷதீப் நாத் 55 ரன்களும் அடிக்க, உத்திரப்பிரதேசத்தின் எண்ணிக்கை 50 ஓவர்களில் 312 என்ற வலுவான நிலைக்கு சென்றது.
ஆனால், அந்த எண்ணிக்கை மும்பைக்கு சவாலானதாக இல்லை. அந்த அணி 41.3 ஓவர்களிலேயே மிகப்பெரிய இலக்கை அசால்ட்டா எட்டி, வெற்றியை ஈட்டி, சாம்பியன் கோப்பையையும் தனதாக்கிக் கொண்டது.
மும்பை அணிக்கு இது 4வது கோப்பையாகும். இக்கோப்பையை தமிழ்நாடு அணி மொத்தம் 5 முறை வென்று முதலிடத்தில் நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தொடரில், மும்பையின் பிரித்விஷா 827 ரன்களுடன், அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.