டெல்லி: நோட்டா வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவிட்டால், வாக்களிக்காமல் இருப்பதை தவிர்க்கும் வகையில் நோட்டா என்ற வாய்ப்பை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. நோட்டா அதிக வாக்குகள் பெற்றாலும், அதற்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதையடுத்து, நோட்டா கொண்டு வந்ததன் முக்கிய நோக்கம் சிதைக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தது. இந் நிலையில், தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் ஒரு தொகுதியில் வேட்பாளரை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அங்கு தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.