அபுதாபி: ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 4 நாட்கள் முடிந்துள்ள நிலையில், ஜிம்பாப்வே அணி, 3 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருக்கும் நிலையில், ஜிம்பாப்வே அணி 8 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஆப்கன் அணி 545 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதன்பிறகு, முதல் இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே 287 ரன்கள் மட்டுமே எடுத்து பாலோ ஆன் பெற்றது.

இந்நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸையும் தொடர்ந்து ஆடிய அந்த அணி, 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 266 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதன்மூலம், 3 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானைவிட 8 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணியின் சீன் வில்லியம்ஸ் 106 ரன்கள் அடித்து, இன்னும் நாட்அவுட்டாக இருக்கிறார். ஆப்கனின் ரஷித்கான் இதுவரை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இன்னும் ஒருநாள் ஆட்டம் முழுமையாக மீதமிருக்கும் நிலையில், எந்தளவிற்கு அதிக ரன்களை அடித்து, ஆப்கனுக்கு ஜிம்பாப்வே நெருக்கடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.