சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதியஜனதா கட்சி, வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் பாரதியஜனதா கட்சி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதன்படி,
திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி தனி, கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் தனி, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது .
இந்த தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து, முடிவு செய்ய. பாஜக மாநில தலைவர் எல் முருகன் டெல்லி சென்றுள்ளார். அங்கு தேசியத்தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் இன்று அல்லது நாளை காலை தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை வெளியிடப்படும் என கூறியுள்ளார்.