சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணாஅறிவாலயத்தில் இன்று மதியம் வெளியிட்டார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 12 கட்சிகள் கொண்ட  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி போட்டியிடுகிறது. . இந்த கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களமிறங்குகிறது. கூட்டணிக் கட்சிகள் பல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் மொத்தம் 187 தொகுதிகளில் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது.

திமுக சார்பில் போட்டியிடும் 173 வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம்…