அமமுகவின் டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது திமுக.

இத்தொகுதியில் அதிமுகவின் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடும் நிலையில், டிடிவி தினகரனும் களம் காண்கிறார். எனவே, கோவில்பட்டி தொகுதிக்கும் அவர் பல்வேறு வியூகங்களை வகுக்கக்கூடும். அத்தொகுதியில் அதிமுக வாக்குகள் பெரியளவில் பிரியும் நிலையில், எதிரணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது ஒரு எதார்த்தமான கருத்துதான்.

ஆனால், தான் போட்டியிடும் தொகுதியின் கள சூழலை வேறுவிதமாக மாற்றி செல்லக்கூடியவர் தினகரன். எனவே, அவர் ஏற்படுத்தும் சவாலை திமுக களத்தில் நின்றால் நன்றாக சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அத்தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிவிட்டது திமுக.

இதனால், டிடிவி தினகரனுக்கான வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும், டிடிவி தினகரனுக்காக திமுக தரப்பு வேண்டுமென்றே விட்டுக்கொடுத்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் சிலர் முன்வைக்கின்றனர்.