
ஆண்டிகுவா: இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை, விண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங் செய்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எனவே, எளிய இலக்கை நோக்கி இரண்டாவதாக களமிறங்கியது விண்டீஸ் அணி. அந்த அணியின் தொடக்க வீரர்களே கிட்டத்தட்ட வெற்றியை உறுதிசெய்து விட்டனர். எவின் லீவிஸ் 65 ரன்களை அடிக்க, ஷாய் ஹோப் 110 ரன்களை அடித்தார்.
இவர்கள் இருவரும் அவுட்டானதும், டேரன் பிராவோ 37 ரன்களையும், ஜேஸன் முகமது 13 ரன்களையும் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர். தற்போதைய நிலையில், தொடரில் 1-0 என்ற கணக்கில் விண்டீஸ் முன்னிலை வகிக்கிறது.
[youtube-feed feed=1]