மும்பை: 2021ம் ஆண்டிற்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை மீண்டும் கைப்பற்றியுள்ளது சீன நிறுவனமான விவோ.
இந்திய – சீன எல்லையில் ஏற்பட்ட பிரச்சினையால், உள்நாட்டில் ஏற்பட்ட சீன எதிர்ப்பு மனநிலை காரணமாக, விவோ நிறுவனத்தின் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது பிசிசிஐ.
விவோ இல்லாத நிலையில், அமீரக நாட்டில் 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தது.
ஆனால், சீனாவுடனான எல்லைப் பிரச்சினை எந்தவகையிலும் தீர்க்கப்படாத நிலையில், ஓராண்டிற்குள்ளேயே தனது பழைய உரிமையை மீண்டும் பெற்றுள்ளது சீன நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு இந்த உரிமை மீண்டும் கிடைத்துள்ளதற்காக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது சீன நிறுவனம்.