சென்னை:
தமிழக சட்ட மன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காணும் பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், அக்கட்சி போட்டியிட உள்ள 23 தொகுதிகளின் இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறும். ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் மே மாதம் 2ம் தேதி எண்ணப்படும்.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
செஞ்சி, மயிலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி, நெய்வேலி தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர், ஆற்காடு, குமிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பொன்னாகரம், தருமபுரி தொகுதிகளும் பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொகுதி எண் & பெயர் வேட்பாளர் பெயர்
1. 58. பென்னாகரம் திரு. ஜி.கே.மணி,
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்
தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி
2. 129. ஆத்தூர் (திண்டுக்கல்) திருமதி. ம. திலகபாமா, பி.காம்,
பொருளாளர், பா.ம.க
3. 64. கீழ்ப்பென்னாத்தூர் திரு. மீ.கா. செல்வக்குமார் எம்.ஏ,
மாநில அமைப்பு செயலாளர்.
4. 33. திருப்போரூர் திரு. திருக்கச்சூர் கி. ஆறுமுகம் பி. எஸ்.சி,
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மாநில துணைப் பொதுச்செயலாளர்.
5. 150. ஜெயங்கொண்டம் வழக்கறிஞர். கே. பாலு, பி.காம், பி.எல்
வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவைத் தலைவர்
6. 42. ஆற்காடு திரு. கே.எல். இளவழகன் டி.எம்.இ ,
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர், மாநில துணைப் பொதுச்செயலாளர்,
7. 50. திருப்பத்தூர் திரு. டி.கே. ராஜா,
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்
மாநில துணைப் பொதுச்செயலாளர்,
8. 59. தருமபுரி திரு. எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பி.எஸ்.சி ,
மாநில துணைப் பொதுச்செயலாளர்,
9. 88. சேலம் மேற்கு திரு. இரா. அருள் பி.எஸ்.சி ,
மாநில துணைப் பொதுச்செயலாளர்,
10. 70. செஞ்சி திரு. எம்.பி.எஸ். இராஜேந்திரன், ,
மாநில துணை அமைப்புச் செயலாளர்