கொல்கத்தா:
ர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளான மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை மம்தா பானர்ஜி இன்று தாக்கல் செய்தார். ஹல்டியா பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அதற்கு முன்னர் நந்திகிராமில் உள்ள ஷிவ் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் நந்திகிராமில் பிரசாரத்திற்காக இன்று தங்க முடிவெடுத்தார். இந்த நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜியை கொலை செய்ய முயற்சி நடைபெற்று உள்ளது. மம்தா பானர்ஜியின் காரை வழிமறித்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து மம்தா கொல்கத்தாவுக்கு புறப்பட்டார். அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.