சென்னை

மிழகத்தில்  இன்றைய (10/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 671 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,56,917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,530 பேர் உயிர் இழந்து 8,40,180 பேர் குணம் அடைந்து தற்போது 4,207 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,37,716 பேர் பாதிக்கப்பட்டு 4,171 பேர் உயிர் இழந்து 2,31,630 பேர் குணம் அடைந்து தற்போது 1,915 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 56,246 பேர் பாதிக்கப்பட்டு 685 பேர் உயிர் இழந்து 55,202 பேர் குணம் அடைந்து தற்போது 359 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 53,332 பேர் பாதிக்கப்பட்டு 786 பேர் உயிர் இழந்து 52,195 பேர் குணம் அடைந்து தற்போது 351 பேர் சிகிச்சையில் உள்ளனர்.